பறத்தல்…

Paraththal_Marantha

 

குளிரூட்டப்பட்ட அறை
மிதமான வெளிச்சம்
ஆடி களித்திட சிறு ஊஞ்சல்
நேரம் தவறாமல் கொரித்திட தானியங்கள்
கலனில் சுத்திகரிக்கப்பட்ட நீர்
அவ்வப்போது அன்பு கொஞ்சல்கள்
வேலைப்பாடுடன் கூடிய அழகிய கூண்டு…

சிறகு பாரமாகிறது
பறத்தலை மறந்த பறவைக்கு…

– ப்ரியன்.

Reader Comments

  1. Jayasaraswathi

    வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!
    அருமை …!!!

    தொடர வாழ்த்துக்கள் …!!!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/