பஞ்சுமிட்டாய் பூப்பவள்!

எதிர்பாரா கணத்தில்
கரம்பற்றி தோள் சாய்கிறாய்
பறவை எழுந்த
கிளையின்
அதிர்வை அடைகிறது
மனம்!

#

எழுதப்படாத பக்கங்களில்
நிறைந்திருக்கிறது
நின்
அழகு!

#

நீ தராமல்
எடுத்துச் சென்றுவிட்ட
முத்தத்தில்
உறைந்துப் போய்விட்டிருக்கிறது
என் உயிர்!

#

விரித்த உன் குடைக்குள்
இடமிருக்கிறதா
எனக்கும்
காதலுக்கும்!

#

நீ –
இதழில்
பஞ்சுமிட்டாய் பூப்பவள்!

– ப்ரியன்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/