காதல் பூக்காடு!

நீ விட்டுச் சென்ற
தடத்தில்
வந்தமர்கிறது – ஒரு
வண்ணத்துப்பூச்சி!

#

நீ இறங்கிய பின்
மெலிதாக ஆடிக்கொண்டே
உன் கதை பேசிக் கொண்டிருக்கிறது
காற்றிடம்
ஊஞ்சல்!

#

நான் வந்தமர்ந்தபோது
விட்டு விலகிய
மரத்தின் நிழல்
நீ வந்தமர
தொட்டு தழுவ வருகிறது!

#

உனக்கான காத்திருத்தலில்
அரச மரத்தின்
இலைகள்
எனக்கான கவிதையை
வாசித்து காட்டுகின்றன!

#

நீ விதைத்து
சென்ற பார்வை வித்தில்
பூத்திருக்கிறது
என்னில் – சிறு
காதல் பூக்காடு!

  • ப்ரியன்

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/