மரணம்

சிதைக்கு நெருப்பூட்டும் போதே
இறந்தவனை பற்றிய நினைவுகள்
எரியூட்டப் படுகின்றன!

அடுத்தநாள் சேதி கேட்டு
சோகமாய் வந்தமரும்
நல்ல ஒரு சொந்ததிற்கு
கிடைக்கிறது
மலர் முகத்தோடு வரவேற்ப்பும்
நாளிதழும்;
சோகம் துடைக்கும்
முகமாய்!

அமெரிக்காவிலிருக்கும்
பையனோ பெண்ணோ
அவசர அவசரமாய்
அஸ்திக் கரைப்புக்கு
வந்து சேர்கிறார்கள்!

அடுத்த வருட திவசம்
காக்கைக்கு ஒரு பிடி சோறோடு நிற்குமா?
நாளிதழில் ஒரு பக்கக் கண்ணீரஞ்சலியா?
என்பதை நிர்ணயிக்கும்
அவன் விட்டுச் சென்ற
ஆஸ்தி!

மரணமும்
சடங்காகிப் போனது!
சடங்கும் இங்கு
விழாவாகிப் போனது!

– ப்ரியன்.

Reader Comments

 1. J.S.ஞானசேகர்

  நன்றாக இருக்கிறது.

  “மரணம்-பிறப்பு
  இரண்டிலும்
  பழையவன் மறக்கப்படுகிறான்
  புதியவன் வியக்கப்படுகிறான்”

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/