உன்னை ஒருமுறையாவது
தொட்டுப் பார்க்க முடியவில்லையே
என்ற சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்!
– ப்ரியன்.
ஒவ்வொரு முறை
நான் கோவில் செல்லும்போதும்
உந்தன் கூந்தல் உதிர்ப் பூவொன்றை
சூடக் கேட்டு
நச்சரிக்கிறான் கடவுள்!
– ப்ரியன்.
உன்னைப் பூவென
மயங்கி சுற்றித் திரியும்
வண்டுகளுக்கு சொல்லிவிட்டாயா
உன் இதழ் தேன்
நான் உண்ண மட்டுமென?
– ப்ரியன்.
கோவில் விட்டு
நீ வெளிவரும்போது
பூக்கடை கிழவி கத்துகிறாள்
அய்யோ!சிலை ஒண்ணு
கோவில்விட்டு போகுதுன்னு!
– ப்ரியன்.
உன்னைப் பற்றி
எழுத எழுதவே
அழகாகிறது என் தமிழ்!
– ப்ரியன்.
வெட்கத்தோடு என்னை தழுவுகிறாய்!
அதை கண்ட வெட்கத்தில்
வாசல்கண்ணை படாரென
சாத்துகிறது காற்று!
– ப்ரியன்.
தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!
– ப்ரியன்.
அழகுக்கு விளக்கம் கேட்ட
குழந்தைக்கு
உன்னைக் காட்டினேன்!
வெட்கத்தோது மாரில் முகம் புதைத்தாய்
அடடா!பேரழகு!
– ப்ரியன்.
ரோஜா பறிக்கையில்
உன் விரல் காயப்படுத்தியதற்காக
வெட்டப் போனேன்!
தொட்டுவிடும் ஆசையில்
குத்திவிட்டதாய்
அழுது தொலைத்தது செடி!
– ப்ரியன்.
நம் இருவர் புகைப்படமெடுத்து
கருப்பு வெள்ளை மையில்
வயதான நம்மை வரைந்திருந்தாய்
கவனித்தாயா?
எல்லாம் மாறியிருந்தது
நம் காதலை தவிர!
– ப்ரியன்.
கோபம் மறந்த
அக்கணத்தில் கண்மூடி
புன்னகைத்தாய்!
ஒரு பட்டாம்பூச்சியின்
சிறகசைப்போடு என்னை வந்து
கட்டிக் கொண்டது காதல்!
– ப்ரியன்.
நேரம் கிடைக்கையில்
கொஞ்சம் கற்றுக்கொடு
உன்னைப் போல்
சிணுங்க
உன் கொலுசுகளுக்கு!
– ப்ரியன்.
என்னை அதிகமாய்
கனவு காண செய்தவர்களுக்கு
என் தண்டனை
தமிழுக்கு – என் கவிதை
உனக்கு – என் காதல்!
– ப்ரியன்.
நீ கண்மேய்ந்த இடத்திலிருந்த
என் எழுத்துக்கள்
பிரசவமாயிருந்தன
கவிதைகளாய்!
– ப்ரியன்.
குழந்தைகளுடன் குழந்தையாய்
கப்பல் விட்டுக் கொண்டிருந்தாய்!
உன்னைத் தொட்டு அவ்வப்போது
சிலிர்த்துக் கொண்டது
மழை!
– ப்ரியன்.
தலைகுளித்து வெளிவந்தாய்
தொலைவானத்து நட்சத்திரங்களாய்
கூந்தல் ஏறி அமர்ந்திருந்தன
நீர் துளிகள்!
– ப்ரியன்.
நீ கண்மூடிச்
சொல்லும்
“அர்சுனா ! அர்சுனா !”
அழகிற்காகவே
அடிக்கடி சாட்டைச் சுழற்றுகிறானாம்
கிருஷ்ணன்!
– ப்ரியன்.
Reader Comments
superp priyan . entha kavithai la yum kutrame illai . ellame superpppppp. i like all
மிக மிக அழகுக் கவிதைகள்.என் காதலைப்போல….
என் கண்கள் தீண்டிய கவிதுளியில் இதுவும் ஒரு துளி….நண்பா வாழ்த்துக்கள்
Ithu Kaavithai ellai… “KAATHALAI” yeluthu vadivathil varainthirukiraai…… i love this lyrics..
Ithu Kaavithai ellai… “KAATHALAI” yeluthu vadivathil varainthirukiraai…… i love this lyrics..
Arumai. Miga Nandraga Irunthathu ungal kavithai. Athilum குழந்தைகளுடன் குழந்தையாய்
கப்பல் விட்டுக் கொண்டிருந்தாய்!
உன்னைத் தொட்டு அவ்வப்போது
சிலிர்த்துக் கொண்டது
மழை! Endra line manathai thottu vitta varigal.
Kathirukirom Ungal Kavithaigaluku
Raja.K
ungal thalam ippothu thaan paarkka kidaiththathu.manasai allum kavithaikal.eezhaththil piranthathaal naan niraiya izhanthu viddeno ena thonrukirathu,ungalaiyum thapu sangaraiyum padiththapin.jaffna,kudaththanai,rajhkumar.
ver very well your kavethai
verry verry fine anna wish for all above
ப்ரியன்.. எனது ஒரு சிறு முயற்சி
http://yaathirigan.blogspot.com/2005/11/blog-post_16.html
–
செந்தில்/Senthil
நன்றி ஞானசேகர்
தபூ சங்கரின் கவிதைகள் போல மிக எளிமையாய், ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கின்றன. மிகவும் ரசித்தேன். நன்றி. வாழ்த்துக்கள்.
நன்றி செந்தில்
கல்கியில் உங்கள் வலைப்பூ..
வாழ்த்துக்கள் ப்ரியன்…!!!
–
செந்தில்/Senthil
/*பேத்தல் கவிதைகளுக்கு பேத்தல் பின்னூட்டங்கள்*/
விமர்சனத்திற்கு நன்றி அநானிமஸ்…இனியாவது பேத்தல் கவிதைளுடன் சில நல்ல கவிதைகளும் இட முயற்சிக்கிறேன்.
பேத்தல் கவிதைகளுக்கு பேத்தல் பின்னூட்டங்கள்
நன்றி அருள்…நளாயினி…மற்றும் அநானிமஸ்
Kalakureenga Priyan!! Paratukkal…innum niraya ezhuthungal
adaaaa.. ! vaalthukal alakaana kavethai
மனதை சிலிர்க்கச்செய்கிற கவிதைகள். படிக்கையில் காதல் மீது காதல் வருகிறது. இந்த வரியே உங்கள் கவிதைகளின் பாதிப்புதான்! நிறைய எழுதுங்கள். புத்தகமாக பதிப்பிக்க முயற்சியுங்கள். பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்….
– அருள்.