நிலவைப் பிரசவித்தவள்

உன் தாயை சந்திக்கையில்
கேட்கவென பிரபஞ்சம் பற்றிய
ஒராயிரம் சந்தேகங்களைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்!
பின்னே,
நிலவைப் பிரசவித்தவளிடம்தானே
கேட்க வேண்டும்
பிரபஞ்ச இரகசியங்களை!

– ப்ரியன்.

Reader Comments

 1. ப்ரியன்

  /*
  ப்ரியன்.

  அசத்துங்க.*/

  நன்றி நண்பன் உங்கள் குழுவின் அறிவுமதி வலைப்பூவின் வாசிப்பாளன் நான் நேற்றுக்கு அறிவுமதிப் பக்கம் வந்து உங்கள் தளம் நுழைந்து பார்த்தவனுக்கு பின்னூட்டம் அடுத்தநாளே (டிரேசர் யாதாவது வெச்சிருகீகளா உங்க வலைபூல?)

  அறிவுமதிக்கு ஒரு வலைப்பூ நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய முயற்சி பாராட்டுகள் மேலும் அவ்வலைபூ மலர வாழ்த்துக்கள்

  உங்களுக்கும் உங்கள் அறிவுமதி குழுவுக்கும் வாழ்த்துக்கள் தொடருங்கள்

  உங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 2. ப்ரியன்

  /*
  வித்தியாசாமான சிந்தனை
  அந்த நிலவை அருகில் இருந்து பார்த்ததாலோ?
  */

  நன்றி ரூபா. நிலவை பக்கத்திலேயே வைத்துக் கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் கூட இருக்கலாம்

 3. ப்ரியன்

  /*ஆகா….. அது எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் கற்பனை வருகிறது.*/

  இதை எல்லாம் கற்பனை என்றால் மற்றவர்கள் செய்வதை எல்லாம் என்னச் சொல்வது தர்சன்? பாராட்டிற்கு நன்றி 😉

 4. நண்பன்

  ப்ரியன்.

  அசத்துங்க.

  அன்புடன்,

  புத்தாண்டு வாழ்த்துகள் கூறும் நண்பன்

 5. ரூபா.

  வித்தியாசாமான சிந்தனை
  அந்த நிலவை அருகில் இருந்து பார்த்ததாலோ?

  வாழ்த்துக்கள் ப்ரியன்.

 6. U.P.Tharsan

  ஆகா….. அது எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் கற்பனை வருகிறது.

  அருமையான கவிதை.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/