விதிகள்

ஓரணி உதைக்கும்
பந்து எதிராளியின்
வலைக்குள் விழுந்தால்
ஒரு புள்ளி
என ஆரம்பமானது
அந்த ஆட்டம்!

ஒருவன் பக்கவாட்டில்
தூரமாய் செல்ல
துரத்தமுடியாமல் திணறினார்கள்
எதிர்முகாம் ஆட்கள்!

கோடுகள் குறிக்கப்பட்டு
எல்லைகள் வரையறுக்கப்பட்டன!

அடுத்ததாய் கால்தடுக்கி
விழவைத்து முட்டியிலும்
நெற்றியிலும் ரத்தப்பொட்டு
வைத்து வெற்றி
தட்டினார்கள்! – நடுவர்கள்
நடுவில் வந்தார்கள்!

கொஞ்சமாய் தவறு
செய்தவன் எச்சரிக்கப்பட்டான்
திரும்பத் திரும்ப
செய்பவன் வெளியேற்றப்பட்டான்!

ஒவ்வொரு தவறிலும்
தப்பிலும் ஆட்டம்
கற்றுக் கொண்டது
புது விதி!

அவ்வாறே வாழ்க்கையும்!

– ப்ரியன்.

அண்ணன் புகாரியின் ‘ஆடுகளக்கோடுகள்’ என்ற கவிதை வாசிக்கும் போது தோன்றிய வரிகள் இவை…நன்றி புகாரி அண்ணா 🙂

Reader Comments

  1. ப்ரியன்

    மிக்க நன்றி பவித்ரா!உங்கள் பின்னூட்டம் மிகவும் எனக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது!கண்டிப்பாக எல்லோருக்கும் பின்னால் யாராவது தூண்டுகோளாக இருக்கிறார்கள்.எனக்கும் 🙂 !

  2. Anonymous

    hi priyan…
    pavithra here!… enna solradhu nu theriyalai…ungalai maadhiri kavithuvuma ennaku paesa theriyaadhu…. honestly..ur job is awesome.. andha kaadal kavidaigal ellamae super! choice of words..excellent!! in fact unga kavidai ku inspiration a irrundha ponnu yaaru..? avangalayum paaratanum.. (if there is one..) ungalukk-ulla..irukara indha talent-a avanga dhanae veli kondu vandhirukaanga… hats off to dat person! keep writting…

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/