அதிசயமான நதி நீ;
கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!*
ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்
வான் நிலவு!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்
மண்நிலவு நீ!*
எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!*
உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்!*
உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!*
ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து
மகுடி ஊதினேன்!
நீயோ
இசையாக வழிகிறாய்!
– ப்ரியன்.
Reader Comments
உணர்ச்சிகளை சொல்லும் மிக நல்ல கவிதை ப்ரியன்…வாழ்த்துக்கள்.
நன்றி தனா 🙂
மிக மிக அருமை !! …
என்ன வலைப்பக்க முகப்பை மாற்றிவிட்டீர்கள் .. இதுவும் நன்றக இருக்கிறது…
//உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்! //
பிரியன் நல்லதொரு கவிதை கொடுத்தீர்கள்.
சிலாகித்த வரிகள் மேலே
வாழ்த்துக்கள்
hi da,
its been long time surfed the blog and got time 2day to have a walkthru…
read ur poems after long time and as usual very nice one.
seeing lot of changes and values in ur current poems with the previous one.
great going da…
/உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!/
!!! சிந்தனை அருமை ப்ரியன்.
எந்த வரி குறித்து பாராட்ட, வழிந்தோடும் இசை என் காதுகளையும் கூர்மையாக்குகிறது.
எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!
மிக மிக அருமை
அதிசயமான நதி நீ;
கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!
கவிதை நன்றாக இருக்கிறது.