என் ஆயுளின் சாவி!

பிணைந்திருக்கும்
நம் கரங்களுக்குள்
கதகதப்பாய் காதல்!

*

உன் கன்னக்குழியில்
இருக்கிறது
என் ஆயுளின் சாவி!

*

வறண்ட உதட்டை
ஈரப்படுத்துகிறாய்!
அவசரமாய்
ஆயுத்தமாகின்றன
என் இதழ்கள் முத்ததிற்கு!

*

உன் வசவுகளை விட
துயரமானது
கோபமான மெளனம்!

*

நம் தனிமையில்
உன் துப்பட்டாவை
கலைக்கும் காற்றுக்கும்
எனக்கும் என்ன உறவென்றால்
என்ன நான் சொல்வது?!

*

காத்திருத்தல் சுகம்
உனக்காக
எனும்போது!

*

வாழ்க்கையை உருட்டுகையில்
எனக்கு விழுந்த
தாயம் நீ!

*

உன் பேரழகை
அழகாய் சொல்பவையே
கவிதைகள்!

*

– ப்ரியன்.

Reader Comments

 1. rajhkumar,jaffna

  pakkam pakkamaga punaivathaivida,moonru varikalil muththamidda makizhchi kodukkirirkal.ungal kavithaikalil,eezhaththu kaathalin thuyaraththaiyum punaiveerkalena ethirpaarkkiren.vaazhththukkalodu,raju kudaththanai.

 2. ஸ்ரீ

  //வறண்ட உதட்டை
  ஈரப்படுத்துகிறாய்!
  அவசரமாய்
  ஆயுத்தமாகின்றன
  என் இதழ்கள் முத்ததிற்கு!//

  இந்த வரிகள் ரொம்ப அருமை ப்ரியன்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/