மனம் உறை பறவை – 02

எந்தன் மரத்தில்
காய்த்திருக்கின்றன
ஆயிரம் ஆயிரம் கனிகள்

வளைந்து வசதியாய்
வளர்ந்திருக்கின்றன
எந்தன் கிளைகள்

கூடுகட்ட
நீ வரும் வழியைதான்
காணவே இல்லை.

– ப்ரியன்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/