8 + 8 = 8

என்னைப் பற்றி எட்டு விடயங்களைச் சொல்ல நண்பர் விழியன் & காதல் கவி இளவரசன் அருட்பெருங்கோ இருவரும் அழைத்து நாட்கள் எட்டுக்கு மேல் ஆகிறது,இன்னும் அறுவர் வந்தழைத்து அழைப்பவர் எண்ணிக்கை எட்டை எட்டினால்தான் எழுதுவதென்றிருந்தேன்(உண்மை சொல்வதாயின் சோம்பேறித்தனம் அன்றி வேறில்லை).இதற்குமேலும் காக்க வைத்தால் இருவரும் சென்னைக்கு விமானம் பிடித்து வந்து ‘டின்’ கட்டிவிடுவார்கள் என்பதால்

1.) மிகவும் பாதித்த நிகழ்வு என்றால் , அறியா வயதில் நிகழ்ந்த என் பெரிய மாமாவின் மரணம்.ஒன்றரை வயது வரை எங்கு சென்றாலும் என்னை சுமந்து சென்ற அவரை என்னிடம் நிரந்தரமாய் பிரித்த காதலுக்கு நிச்சயம் பலம் அதிகம்தான்.

2.) கல்லூரியில் நுழையும் முன்பு வரை படிப்பில் சுட்டிதான் , கல்லூரியில் முதல் இரண்டு வருடங்களில் நான்கு ‘அரியர்கள்’.உண்மை காரணம் இன்னமும் என்னால் கூட கண்டறிய இயலவில்லை.

3.) நான் காதலிக்கிறேன் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்த இரகசியம் , எனக்குள் காதல் பிறந்த கதை , நான் என்னவளிடம் என் காதலை சொன்ன கதை தெரிய வேண்டுமா ? இதை படியுங்கள் ‘காதல் கதை‘.

4.) என் காதலை காதலியிடம் சொன்னதைவிட சுவாரஸ்யமானது , அதை என் பெற்றோரிடம் சொன்ன சம்பவம்.சாதரணமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓர் இரவில் ஏதோ காபி குடிக்க அனுமதி வேண்டுவதுப் போல் சொன்னேன்.அவர்கள் அவ்வளவு சுதந்திரம் தந்து வளர்த்திருந்தார்கள்.

5.) என்னின் ‘இருந்தால்’ கனவுகள் அடிக்கடி மாற்றம் காணும்.பட்டியலில்

# முதலமைச்சராக இருந்தால்
# பிரதமராக இருந்தால்
# இராஜராஜன் காலத்தில் இருந்திருந்தால்
# இராணுவத்தில் இடம் கிடைத்திருந்தால் ,

என இப்படி பல.ஆனால் இப்போது அடிக்கடி காணும் கனவு ‘ஈழம்’.இக்கனவு நிச்சயம் சீக்கிரமாய் பலிக்க வேண்டும்…நிச்சயம் பலிக்கும்…

6.) என்னிடம் எனக்கு பிடித்த குணங்கள் , சகிப்பு தன்மையும் , நேரம் தவறாமையும்.

7.) என்னிடம் எனக்கு பிடிக்காத விடயங்கள் , கோபம் & செயலை தள்ளிப்போடும் செயலும்.இவற்றால் இழந்தவை ஏராளம் என்றாலும் இன்னும் திருந்துவதாய் இல்லை.

என்ன ஆறாவதும் ஏழாவதும் செமத்தியா உதைக்குதா? ஆனா உண்மை அதுதானுங்க.இடம் , ஆள் , பொருள் பொறுத்து குணம் மாறும்.உதாரணத்திற்கு ,

என் வேலை – தள்ளிப்போடப்படும்.
மற்றவர்களின் வேலை – மாட்டாது.

நண்பர்கள் , உறவினர்கள் – சகிப்புதன்மை அளவில் அடங்காது.
நெருங்கிய உறவுகளிடம் \ விதி மீறுபவர்களிடம் – சகிப்புதன்மை – கிராம் என்ன விலை?

8.) ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…!!! இரகசியம்!!! கல்லூரில் கற்ற , தொடர்ந்த மூன்று கெட்ட பழக்கங்களில் இரண்டு பழக்கங்கள் இன்று என்னிடம் சுத்தமாய் இல்லை , மூன்றாவது – அழகு இரசித்தல் (அழகுத் தமிழில் – ‘சைட் அடித்தல்’) இன்னும் இருக்கு…இருக்கும்…அதுதானே என் பல கவிதைகளின் வித்து…(அழகு இரசித்தல் தப்பா என்ன???).

கொசுறு :

தமிழனுக்கு விஷம் வாங்கினாலும் கொசுறு வேண்டுமே…

தினமும் தவறாமல் முதலில் பார்க்கும் எட்டு இணையதளங்கள்

1.) SDN
2.) இந்தியன் டெலிவிஷன்.காம்
3.) டெலிவிஷன் பாயிண்ட்.காம்
4.) பி.பி.சி. தமிழ்
5.) தட்ஸ்தமிழ்.காம்
6.) தமிழ்மணம்.காம்
7.) அன்புடன்
8.) ஈழம் பேஜ்.காம்

என்னையும் ஆட்டத்தில் இணைத்த நண்பர் விழியன் , அருட்பெருங்கோ இருவரும் எனது நன்றிகள்.

வணக்கம்…

https://www.theloadguru.com/