Sep 02

வெட்கத்தின் மை!

Posted by ப்ரியன் on Sep 02 2008 at 12:30 am

உன் வெட்கத்தின்

மையால்

வரையப்படுகிறது

அந்தி!

*

உன் புன்னகைகளை

மதுக் கோப்பையில்

நிரப்பித் தந்தேன்

தள்ளாடியபடி இருக்கிறது

இதயம்!

*

காதல் மீனுக்கு

பொரி

நீ,நான்!!

*

விரலசைத்து

நீ பேசும்போது

காற்று

ஓர் வீணை!

*

உன்னோடு

நான் இருக்கையில்

உலகின் பரப்பளவு

சில சதுர அடிகள்!

*

நீ சிந்தும்

வெட்கத்தை

சேலையென

உடுத்திக் கொள்கின்றன

என் கவிதைகள்!

 

- ப்ரியன்.

4 Responses to “வெட்கத்தின் மை!”

  1. அடடா.. அருமையான கவிதைகள்.. காதல் மயம்.. திருமண கனவு..

    எல்லா வளங்களையும் பெற்று காதலோடு வாழுங்கள்..

  2. நல்லாயிருக்கு
    வாழ்த்துக்கள்

  3. Gandhi says:

    vanakkam nanba………thirumanathirkku manamaarntha vaalthukkal………ungal kavithaigal ellam arumai………athai suttuthan en nanbargalukellam anupugiren…kovichukatheenga…….

  4. இந்து சமுத்திர முத்து says:

    தூள் !!!!

Leave a Reply

FireStats icon Powered by FireStats