திருமண வரவேற்பு அழைப்பிதழ்!

அன்பின் நண்பர்களே,

இதயத்தால் இணைந்திட்ட
எங்களின் இல்லறப் பாதையெங்கும்
உங்களின் வாழ்த்துக்களால்
தோரணம் கட்டிட
விரும்பி அழைக்கிறோம்!

–  ப்ரியன்
மதுமிதா

(இடம் , தேதி மற்றும் நேர விபரங்களுக்கு படத்தை பெரிதாக்கி பார்க்கவும்).

அழைப்பு

46 thoughts on “திருமண வரவேற்பு அழைப்பிதழ்!”

 1. பத்திரிகை ரொம்ப அருமையாக இருக்கு. நான் உங்கள் மாடல் பயன்படுத்தி கொள்கிறேன்.நன்றி.

 2. வணக்கம் என் அருமை நண்பரே!

  நான் இணையதளத்தில் ஒரு நல்ல திருமண அழைப்பிதழை தேடிகொண்டிருந்தபொழுது தங்களின் அழைப்பின் நகலைக் கண்டு வியந்தேன்………மிகவும் அருமை……..வாழ்க உங்கள் கவிதை தொண்டு…….

  என்றும் உங்கள் நண்பன்,
  மா.சிவசங்கர்

 3. அன்பு பிரியன் அவர்களே,
  உங்களின் திருமண அழைப்பிதழ் வாசகங்களை என் திரும்ண அழைப்பிதழுக்காக பயன்படுத்திக் கொண்டுவிட்டேன். உங்களின் அனுமதியின்றி. மன்னித்து எனது திருமணத்திற்கு வர வேண்டும்.
  திருமண நாள் : 27.11.2009,
  இடம் : வாசவி பவனம், வைசியாள் வீதி, கோவை.
  நேரம் : காலை 630 முதல் 7.30 மணிக்குள்

 4. Nice to hear the news.

  இனிய திருமண நல்வாழ்த்துக்கள் 🙂 [belated]

  //16ம் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.//

  repeat………….

  Cheers,
  Raghavan alias Saravanan M.

 5. kadavul innaitha kathalai Manithan Pirikathirukattum.

  Irraivani Aasigalum, Nal ithayathin Aasigalum eppothum um iruvarodum irukattum.

  Thamil Illam makkalin nalathirkaga thodarnthu kural olikattum

  walthukaludan

  Rev.D.Rajan Immanuel
  (Christian Priest, Chenni)
  9940210102

 6. திருமண வாழ்க்கைக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.
  வாழ்த்துக்கள் ப்ரியன்

 7. இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ப்ரியன் மற்றும் பதுமிதா இருவருக்கும் !
  உள்ளம் பொங்கும் ஆனந்தங்களோடு, சகல சௌபாக்கியங்களும் பெற்று இருவரும் வாழ எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !

 8. வசந்ததின் தொட்டிலில்
  இசை மீட்ட
  இணையும் இரு மனங்களுக்கு
  என் இனிய வாழ்த்துக்கள்
  “பூக்களுக்குள்ளே தேன் உள்ளவரை
  காதலர் வாழ்க.
  பூமிக்கு மேலே வான் உள்ள வரை
  காதலும் வாழ்க”
  வைரமுத்து வரிகளோடு………..

  சிங்.செயகுமார்

 9. வாழ்த்துக்கள் ப்ரியன். இசைபட வாழ வாழ்த்துகிறோம்.

 10. உங்கள் கவிதைகள் படித்தேன் அருமை….

  எனது ஊரும் பெண்ணாடம் தான்…..

  இனிய திருமண வாழ்த்துக்கள் 🙂 🙂

 11. இனிய திருமண வாழ்த்துக்கள் விக்கி & மதுமிதா !!

  மண விழாவிற்கு வர முடியாவிட்டாலும் எம் வாழ்த்துக்கள் உஙளுக்கு வந்துகொண்டே இருக்கும் !! 🙂

 12. நூறாண்டு மணவாழ்க்கை
  ஆறாண்டாய் ஓடட்டும் – உம்
  மழலைகளின் சிரிப்பொலியில்
  சோகங்கள் தேயட்டும்.

  வாழ்த்துக்கள்.

 13. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
  🙂
  🙂
  🙂

  வாழ்வின் எல்லா நலன்களையும் பெற்று இனிதாய் காதலாய் வாழுங்கள்.
  🙂

 14. வாழ்த்துக்கள் நண்பரே..!! தமிழ்மன்றத்தில் தங்களின் அழைப்பினை கண்டேன்..!! கொஞ்சும் தமிழில் எழிலுடன் இருக்கும் அழைப்பிதழ் போலவே தங்கள் வாழ்வும் சிறப்புடனும் எழிலுடனும் என்றும் இனிமையாக அமைந்திட எனது வாழ்த்துக்கள்…!!

 15. வாழ்த்துக்கள் ப்ரியன்.. அழைப்பிதழில் உங்க கவிதை ஒண்ணு எழுதி இருப்பீங்கன்னு நினைச்சேன். அண்ணன் கவிதையும் ரொம்ப அருமையாகத் தான் இருக்கு

 16. உங்களின் கவிதை வரிகளை சொந்தம் கொண்டாட வரும்
  “மதுமிதா” எனும் பூவையோடு நின் வாழ்க்கை என்றும் மலர்ந்திருக்கட்டும்…

  வாழ்த்துக்கள் ப்ரியனே…

 17. இனிய திருமண நல வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு

 18. அழைப்புக்கு நன்றி.அழைப்பிதழ் அழகாக இருக்குறது.திருமண வாழ்க்கைக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.