பேவு பெல்லா

பேவு – வேப்பம் பூ

பெல்லா – வெல்லம்

கன்னட / தெலுங்கு வருடபிறப்பான(உகாதி) நாளைய தினம் , வாழ்வின் இரு பக்கங்களான சுகம் , துக்கத்தை குறிக்கும் வகையில் சுகத்தினை குறிக்க இனிப்பான வெல்லத்தையும் , துக்கத்திற்கு கசப்பான வேப்பம் பூவையும் கலந்து பேவு பெல்லா தயாரித்து கடவுளுக்கு படைத்து பின் உண்ணுவது கன்னட மக்களின் வழக்கம்.தெலுங்கு மக்கள் இனிப்பு , கசப்பு , உவர்ப்பு , காரம் , துவர்ப்பு , புளிப்பு என எல்லா வகை சுவைகளையும் கலந்து தயாரிப்பார்கள் அதன் பெயர் “உகாதி பச்சடி”.

பேவு பெல்லா செய்முறை :

வேப்பம் பூவையும் பொடியாக்கிய வெல்லத்தையும் கலந்து சிறிது நேரம் வைத்தால் பேவு பெல்லா தயார்.

எங்கள் வீட்டில் ,

வேப்பம் பூவையும் பொடியாக்கிய வெல்லத்தையும் வாழைப் பழத்தையும் சிறிது நெய்யும் கலந்து செய்வார்கள்.எங்கள் கிராமத்தில் இதை பிள்ளையார் கோவிலில் கொடுத்து பலர் கொடுத்ததுடன் கலந்து , பின் நம் பங்கை பிரித்து தருவார்கள்.காலை உணவுக்கு(அநேகமாக இட்லி) முன் வெறும் வயிற்றில் உண்போம்.

தெலுங்கு மக்கள் முறை : உகாதி பச்சடி

 1. வேப்பம் இலை – கசப்பு
 2. மாங்காய் – துவர்ப்பு
 3. உப்பு – உவர்ப்பு
 4. வெல்லம் – இனிப்பு
 5. புளி சாறு – புளிப்பு
 6. மிளகாய் – காரம்

நறுக்கிய வெப்பம் இலை , மாங்காய் , மிளகாய் உடன் சிறிது உப்பு , புளிசாறு , பொடியாக்கிய வெல்லம் கலந்தால் ‘உகாதி பச்சடி’ தயார்.

தமிழனோ , கன்னடனோ , தெலுங்கனோ ,  இந்துவோ , முஸ்லீமோ , உகாதியோ , வேறெரு நாளோ வேப்பம் இலை/பூவை உடலில் சேர்ப்பது நல்லது , இயற்கை தந்த கிருமி நாசினி.பேவு பெல்லா / உகாதி பச்சடி செய்து உண்டு பார்ப்போமே.

3 thoughts on “பேவு பெல்லா

 1. viki kaalailaye naavoora seiringa…
  unga veetla pevu pellava….

  innum niraya…niraya… yezudhunga…
  kavithaiya sonnempa…

  aana nalla information…..

 2. //தமிழனோ , கன்னடனோ , தெலுங்கனோ , இந்துவோ , முஸ்லீமோ , உகாதியோ , வேறெரு நாளோ வேப்பம் இலை/பூவை உடலில் சேர்ப்பது நல்லது , இயற்கை தந்த கிருமி நாசினி.பேவு பெல்லா / உகாதி பச்சடி செய்து உண்டு பார்ப்போமே.
  //

  இந்த வரிகளுக்காகவே இந்த பதிவை ரசித்தேன்

  மத்தபடி அகிலன் கமெண்ட் சூப்பர் 😉

 3. அதான் உங்களுக்கு கல்யாணமாடிச்சின்னு எங்களுக்கு தெரியும் தானே.. அப்புறம் எதுக்கு சமையல் பதிவு போட்டு அழறீங்க.. இடுக்கண் வருங்கால் நகுக கேட்டதில்லையா நீங்க.. சரி பேவு பெல்லாவாச்சும் உங்க துன்பத்தை குறைக்குதான்னு பாப்பம்..

  (மது அக்கா பின்னூட்டம்லாம் படிக்க மாட்டாங்கள்ல)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.