நீ…நான்…பின்,நமக்கான மழை…

 

அது , அது மட்டுமே காதல் வரிசையின் தொடர்ச்சி : #11#10 , #09 , #08 , #07 , #06 , #05 ,#04 , #03 , # 02 , # 01

நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன்
நம்மோடு சேர்ந்து
தானும் நனைந்து
நடுங்கியது மழை!

*

அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது
ஏதாவது ஒரு காதலின்
கண்ணீர்!

*

மழை
மழையை மட்டும் கொணர்வதில்லை
சில நேரங்களில்
சில தேவதைகளையும்!

*

நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!

*

சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது
உன் மேல் விழும்
மழைத்துளி!

*

மழை
உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில்
அவஸ்தையாகவும்!

*

மழை வேண்டி
வருபவர்களையெல்லாம்
விரட்டியடித்தபடி இருக்கிறான்
கடவுள்!
படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
உன்னை ஊருக்குள்
அழைத்து வரும்படி!

*

ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!

*

இன்றும் விடாமல்
பெய்தபடி
நீ
என்னைக் குடைக்குள்
அழைத்துக் கொண்ட
அவ்விரவின் மழை!

*

என் கவிதைகளுக்கு
என்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
உன் கையால்
மழை நாளில்
காகித கப்பல்களாவதைவிட!

*

மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!

*

சிறுமழை
பெருமழை
எதுவும்
மழையை மட்டும் கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும்!

*

நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான மழை!

*

நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
காதல்!

*

முகிலின் நிராகரிப்பு
மழை!
உன்னின் நிராகரிப்பு
என் கண்ணீர்!

*

குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க
குதூகலமாய்
பொழியத் தொடங்கியது மழை!

*

மின்னல்
மழையின் கிறுக்கலென்றால்
உன் விரல்
என்மேல் வரைந்ததை
என்னென்பது?!

*

மழை
மழையை மட்டும் குறிக்காது
காதலையும்!

*

நீ பெண்ணாகவும்
நான் ஆணாகவும் ஆனதின் இரகசியம்
துலங்கியது
ஓர் மழையிரவில்!

*

நீ
பெண்ணின் ஓர்துளி
நான்
ஆணின் ஓர்துளி
வா,
காதல் பொழிவோம்!

*

என் வேர்கள்
காத்திருக்கின்றன
உன்
மழைக்காக!

*

மழை
வானின் ஓர்துளி
நீ
அழகின் ஓர்துளி!

– ப்ரியன்.

26 thoughts on “நீ…நான்…பின்,நமக்கான மழை…

 1. Very nice………unga kavithai……..malai illatha kuraya……….aekama mathuthu……….superb………..

 2. சிறந்த படைப்பு … வாழ்த்துக்கள்.
  எனக்கு பிடித்தது…

  நனைந்து சுகித்திருந்த
  உன்னை அம்மா
  இழுத்துப் போக
  சோவென அழத்தொடங்கியது
  மழை!

 3. Anbulla Piriyanuku, ungal kavidhaikalul idhu migavum menmayaaana ondru.. Oru mazhai konda kaadhalai ivvalavu thulliyamaga vadivamaithathuku nandri… “THAMIZ INI MELLACHAAGUM” endru baarathi kooriyadhu thavaro endru thonukindrathu.. Eppadi chaagum un pondra kavingnanum ennai pondra vaasaganuum ulla varai?????

 4. உங்கள் மழை என் மனதிலும் சாரல் அடிக்கிறது.

  வாழ்த்துக்கள்

 5. காதல் சேர்க்கின்றன உங்கள் கவிதைகள்.

  //நீயும் நனைந்தாய்
  நானும் நனைந்தேன்
  நம்மோடு சேர்ந்து
  தானும் நனைந்து
  நடுங்கியது மழை!//

  //நனைந்து சுகித்திருந்த
  உன்னை அம்மா
  இழுத்துப் போக
  சோவென அழத்தொடங்கியது
  மழை!//

  //மழை வேண்டி
  வருபவர்களையெல்லாம்
  விரட்டியடித்தபடி இருக்கிறான்
  கடவுள்!
  படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
  உன்னை ஊருக்குள்
  அழைத்து வரும்படி!//

  //ஊரிலிருந்து
  நீ வருவாயென
  நேற்றே வந்து
  வாசல் தெளித்துப் போயிருந்தது
  மழை!//

  //என் கவிதைகளுக்கு
  என்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
  உன் கையால்
  மழை நாளில்
  காகித கப்பல்களாவதைவிட!//

  என்னைக் கவர்ந்த வரிகள் இவை.

  -ப்ரியமுடன்
  சேரல்

 6. அடித்து பெய்யும்
  மழையில் கரைகிறது
  ஏதாவது ஒரு காதலின்
  கண்ணீர்!…..

  vikki romba arumaya irukupa…

  mazaiku aaruthal sollama ini yepidipa yennala irukamudiyuM……..

 7. மழை
  வானின் ஓர்துளி
  நீ
  அழகின் ஓர்துளி

  very nice

 8. அடித்து பெய்யும்
  மழையில் கரைகிறது
  ஏதாவது ஒரு காதலின்
  கண்ணீர்!

  disturbing me

 9. நானும் இந்த வலைப்பதிவுகளை வாசிக்க தொடங்கின நாளில் இருந்து பார்க்கிறேன் காதல் கவிதைகளுக்கென்றே இருக்கிற சில பேருல நீங்களும் ஒருத்தர் பிரியன்…

 10. ம்ம்ம்…ஜல்ஸ் பிடிச்சுக்கிச்சு…ஆனாலும் நல்லாருக்கு…
  அன்புடன் அருணா

 11. Pingback: Tamilish.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.