உன்னைப் பற்றிய
கனவுகளை தின்று
பெருத்து கிடக்கிறது
என்
படுக்கைத் தலையணை!
*
குளித்து
நீ வருவதற்குள்;
ஒரு சின்ன போரே
நிகழ்ந்துவிடுகிறது
அலமாரி சேலைகளுக்குள்;
உனைக் கட்டிக் கொள்ள!
*
நீ கட்டிக்கொள்ள
சேலைக்கும் பிறக்கிறது
காமம்!
*
நீ –
சுவர்க்கத்திற்கான
திசைக்காட்டி!
*
நட்சத்திரங்களை கூட
ஒளித்து வைத்துவிடுவேன்
உன் நினைவுகளை
எங்கே ஒளிப்பது?
– ப்ரியன்.
அது , அது மட்டுமே காதல்! #7 , #6 , #5 , #4 , #3 , # 02 , # 01
Reader Comments
hi
அருமையான கவிதை அவசியம் தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
ஆமாம் நினைவுகள் மறைக்க முடியாதவை
நல்ல கவிதை. பிரியன் அன்புடனில் போட வேண்டியது தானே
பிச்சுமணி
இது.. இது… இதுவும் தான் காதல் என்பது போல் மறைபொருள் கூறுது கவிதைகள்… இது காதலர்கள் கொண்டாடும் காலம் என்பதறிந்திருந்தும்…
மிகவும் அருமை… ப்ரியன்…