எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும்
பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச்
சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும்
பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே
இருக்கின்றன.
வரலாற்று ஆய்வாளர்் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய
நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின்
தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா
அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.
நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன்,
திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான
தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின்் பெயர்களாக இருந்தன.
பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன்,
இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற
வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு
வழங்கும் பெயர்களை வைத்து அவர்் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.
எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய
இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு
நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள்
கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர்
அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை
உணர்ந்திலர்.
அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய
வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை,
அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க.
(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான
ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள்
தருதல் காண்க.
(2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும்.
தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை,
தூஷpத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற
சொல் பிறக்கிறது.
(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்)
கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று
பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும்
இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக்
காணலாம்.
(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம்
என்பது எருமை எனப்பொருள்படும்.
(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன்
சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர்.
அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம்,
கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.
பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத்
தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற
வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத்
தவறிவிடுகின்றனர்.
தமிழ் வடமொழி
கருங்குழலி கிருஸ்ணவேணி
காரரசி கிருஸ்ணராணி
காரரசன் கிருஸ்ணராசா
பொன்னடியான் கனகதாஸ்
ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை
வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன்,
றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்.
ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ்
சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ. கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா,
ஹரிச்சந்திரா,
ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ
எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ்,
டிலக்ஷன், டிலான், டிலானி.
பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட
உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச்
சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப்
பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும்.
CHRIS
SILVERWOOD - (SILVER-
வெள்ளி.
WOOD- மரம்)
இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97.
TIGER
WOOD - (TIGER
- புலி.
WOOD
- மரம்)
அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997.
LIANE
WINTER - (WINTER
- குளிர்காலம்)
செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.்
DR. LE.
DE. FOREST - (FOREST
- காடு)
FILL
எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923
ALEXANDER GRAHAM BELL - (BELL
- மணி)
தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876.
COLT -
(COLT
- ஆண்குதிரைக்குட்டி)
ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837.
ADAM
SMITH - (SMITH
- கொற்றொழிலாளி)
பழம் பெரும் பொருளியலறிஞர்.
GARY
BECKER - (BECK
- மலையருவி)
1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
SIR
RICHARD STONE - (STONE
- கல்)
1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்.
FREDERICK NORTH - (NORTH
- வடக்கு)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805.
SIR
ROBERT BROWNRIG - (BROWN
- மண்நிறம்)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820
STERN
SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்)
இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997.
ROBIN
COOK - (ROBIN
- ஒருவகைப் பறவை.
COOK
- சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997.
DR.
LIAM FOX - (FOX
- நரி)
இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997.
மேலும் சில பெயர்கள் :-
ONION,
SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDER
பொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும்
இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.
தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை
வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும்.
தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய
தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே
பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும்
எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப்
பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம்.
சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும்
தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க
இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத்
தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள்
பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை
ஆக்கியுள்ளோம்.
முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும்
அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ்,
பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம்.
பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற்
பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம்.
மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள்
ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" -
மக்கட்பெயர் 46இ000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25இ000
பெண்பாற் பெயர்களையும் 21இ000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்ள முன்மொழி, பின்மொழிகளைக்கொண்டு பொருள்
பொதிந்தனவும் வழுவற்றனவும் ஒலிநயமுடையனவுமான அனைத்துப் பெயர்களையும் நாம்
ஆக்கவில்லை. ஆகவே, அவ்வாறு செய்யவல்லார் முன்மொழி பின்மொழிகளைப்
பொருந்தியவாறு இணைத்து மேலும் பல பெயர்களை ஆக்கிக் கொள்வாரென
நம்புகின்றோம்.
தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை,
சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும்.
இப்பெயர்கள் மக்கள் வழக்கில் வருகின்ற பொழுதே எமது இவ் வருஞ்செயல்
பயன்விளைப்பதாகுமென நம்புகிறோம். 'குற்றம் களைந்து குணம் நாடிக் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதற்கிணங்க இவ் வேட்டின்பால் வழுக்கள்
காணப்படுமாயின் அவற்றைப் பொறுத்தருள வேண்டுவதோடு எமக்குச் சுட்டிக்
காட்டவும் வேண்டுகிறோம்.
23 - 06 - 1997 - தமிழ் வளர்ச்சிக் கழகம் -
|