சில காதல் கவிதைகள் – 7

தொடமால்
முத்தமிடாமல்
காதலிக்க வேண்டுமென்கிறாய்!
பார்வைகள் புணர்தலை
என்ன செய்வாய்!

– ப்ரியன்.

ஊர் என்ன பெயரோ
வைத்து அழைத்துவிட்டு போகட்டும்!
‘டேய்’ என நீ விளித்தலே
பிடிக்கிறது எனக்கு!
இன்று முதல்
‘டேய்’ என்பதே
என் பெயராகட்டும்!

– ப்ரியன்.

உன் கண்
பூக்களில்
வந்தமர்ந்து தேன் பருகும்
வண்டுகளாய்
என் கண்கள்!

– ப்ரியன்.

நீ இடும் புள்ளிகளில்
நீ ஒரு ஓரமாய்
நான் ஒரு ஓரமாய்
தள்ளி நிற்கிறோம்
இணைத்தேவிடுகிறாய் கோடுகளால்
கோலமாய் முடிக்கையில்!

– ப்ரியன்.

வானவில் வந்தால்
மழை நின்று போகும்
என்கிறது ஒரு கிழம்!
உன் கண்வில்லை
கண்டால் கவிதைமழை
பொழியும் என்கிறது – இந்த
காதல் பழம்!

– ப்ரியன்.

கருப்பான என்
வாழ்க்கைத் தாளில்
வெள்ளை வெள்ளை
எழுத்துக் கவிதைகளாய்
நீ!

– ப்ரியன்.

Reader Comments

 1. Naveen Prakash

  //தொடமால்
  முத்தமிடாமல்
  காதலிக்க வேண்டுமென்கிறாய்!
  பார்வைகள் புணர்தலை
  என்ன செய்வாய்!//

  புணர்ந்த கண்களால்
  புணைந்த கவிதைகள்
  அழகு ப்ரீயன் !!

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/