மற்றொரு மாலையில்… – 01

கண்களை இறுக மூடுகிறேன்
மெல்ல
இருள் படரத் தொடங்குகிறது!
ஒன்று இரண்டு
எனத் தொடங்கி
பின்
ஆயிரமாயிரம் பிரதிகளாய்
விழியெங்கும் விரவி
நிரைகிறாய்!

ஆகாய சிலேட்டில்
சில ஆயிரம் பெளர்ணமிகள்
சில நூறு சூரியன்கள்
வரைந்து
எச்சில் தொட்டு அழித்து
காலக் குழந்தை விளையாடி
முடித்த ஒரு மாலை பொழுதில்

எதிர்பாரா திசையிலிருந்து
எதிர்பாரா கணத்தில்
தலை கலைக்கும்
காற்றின் வேகமாய்
கவனம் கலைக்கிறது
வழியனுப்ப வந்தவர்களுடன்
கலகலக்கும்
ஒரு குரல்!

அதே பூ முகம்
அதே உயிர் பறிக்கும் கண்கள்!

மெல்ல
இதயத்தின் ‘தடக் தடக்’
ஓசையோடு ஒத்து
ஓடத் தொடங்குறது
வேகமாய் இரயிலும்!

நாளிதழில் முகம் புதைத்திருந்தவனை
மென்மையாக அதே குரல்
தட்டி எழுப்புகிறது.

‘இந்த பெட்டியை கொஞ்சம்
இப்படி நகர்த்தி தருகிறீர்களா?’

நாளிதழ் நகர – என்
முகம் பார்த்ததும்
அவளும் ஒரு கணம்
மூர்ச்சையாகித்தான் போனாள்!

இரயிலோடு போட்டியிட்டு
பின்னால் நகர்ந்துக் கொண்டிருந்த
மரங்கள் வெறித்து வெறுத்து
கவனம் திருப்பிய நிமிடம்!

அதற்காகவே காத்திருந்தவளாய்
அதிரம் குவித்து
‘நீங்க?’

‘ப்ரியன்’

‘நான் ப்ரியா’ நினைவிருக்கிறதா?

‘ம்!’

மறக்கக் கூடியதா?
அவள் நினைவுகள்!

மறந்தால்!நிலைக்ககூடியதா?
எந்தன் உயிர்!!

இனி உருகும் உயிர் காண : மற்றொரு மாலையில்… – 02

Posts Tagged with…

Reader Comments

  1. தேவ் | Dev

    அசத்துங்க ப்ரியன்.. தொடர்ட்டும் தோரணம்

  2. நவீன் ப்ரகாஷ்

    //மறக்கக் கூடியதா?
    அவள் நினைவுகள்!

    மறந்தால்!நிலைக்ககூடியதா?
    எந்தன் உயிர்!!//

    ப்ரியன் ஆரம்பமே அசத்தல் :)) காதல் உருகும்
    சாலையில்
    கால் புதைய
    நடக்க காத்திருக்கிறேன் !

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/