அது , அது மட்டுமே காதல்! #11

நம் பிரிவின்
கடைசி புள்ளியில்
ஆரம்பிக்கிறது
அடுத்த சந்திப்பிற்கான
ஆயுத்தம்!

*

கடைசிவரை
பேசவதற்காக எடுத்து வந்த
வார்த்தைகள் பேசப்படமலேயே
திரும்புகின்றன;
நம் சந்திப்புகளில்!

*

பூங்காவின் வாசலில்
உனக்காக பூ வாங்க
அரைமுழம் அதிகமாய்
அளக்கிறாள் பூக்காரகிழவி!

*

மூச்சு முட்டும்
தொலைவில் நாம்
சந்தித்துக் கொள்ளும்பொழுது
நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்;
நான் மூர்ச்சையாகிறேன்!

*

மேல் விழுந்து தங்கும்
இலைகளை தட்டிவிடாதே!

நம் சந்திப்பிற்கு
அதனடியை தேர்ந்ததற்கு
நன்றி பகன்று
ஆசிர்வதிக்கிறது அம்மரம்!

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! #10 , #09 , #08 , #07 , #06 , #05 , #04 , #03 , # 02 , # 01

Reader Comments

 1. Lydia

  கடைசிவரை
  பேசவதற்காக எடுத்து வந்த
  வார்த்தைகள் பேசப்படமலேயே
  திரும்புகின்றன;
  நம் சந்திப்புகளில்!

  Romba romba nalla iruku!!!!!!!!!!!!!!

 2. தெவா.

  உங்கள் படைப்பை
  வலைச்சரத்தில்
  பதிவு செய்து
  உள்ளேன்.
  கருத்துரை தருக..
  தேவா..

 3. anbumani

  //பூங்காவின் வாசலில்
  உனக்காக பூ வாங்க
  அரைமுழம் அதகமாய்
  அளக்கிறாள் பூக்காரகிழவி//

  இதன் மூலம் தங்கள் காதலின் ஆயுள் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

 4. Manuneedhi

  //மூச்சு முட்டும்
  தொலைவில் நாம்
  சந்தித்துக் கொள்ளும்பொழுது
  நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்;
  நான் மூர்ச்சையாகிறேன்! //

  miga miga arumai.. i simply loved this part..

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/