அது , அது மட்டுமே காதல்! # 05

கலைந்தாடும் கூந்தல்
காற்றில் வரைகிறது
உன்னழகை!

*

மச்சப்புள்ளிகளை இணைத்து
இறைவன்
இட்ட கோலம் நீ!

*

உன் முத்தத்தின்
ஈரத்தில்
காய்ந்துவிடுகிறது
என் காயம்!

*

சந்தித்த போது
படபடத்து கொண்டும்
பிரிந்திருக்கும் போது
பேசிக் கொண்டும்
நம் இதயங்கள்!

*

வா,
காதல் பூஜையில்
நம்மை பூவாய்
சமர்ப்பிப்போம்!

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! #4 , #3 , # 02 , # 01

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/