அது , அது மட்டுமே காதல்! # 06

முகம் அப்பிய
மஞ்சள் சிவக்கிறது
உன் நாணத்தால்!

*

என்
கவிதைகள்
உன்
அழகைப் பற்றின
சிறு குறிப்புகள்!

*

எதிர்வீட்டுக் குழந்தைகளுக்கு
நாம் தரும்
முத்தங்கள்
எங்காவது சந்தித்து
பேசிக் கொள்ளக்கூடும்!

*

உன்னைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது
நீ தரும்
முத்தமும்!

*

உன் நாணத்தை
அள்ளிப் பருகவேண்டும்;
எங்கே,
உன் இதழ்காட்டு!

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! #5 , #4 , #3 , # 02 , # 01

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/