அது , அது மட்டுமே காதல்! # 07

சிறுவயதில்
அடிக்கடி நீ
காணாமல் போய்விடுவாயென
உன் அம்மா சொன்னார்கள்;
ம்,
பெரிய சக்கரைக்கட்டியென
எறும்புகள் தூக்கிச் சென்றிருக்கும்!
*
மழலைகள் சூழ
அமர்ந்திருக்கையில்;
அவர்கள் சிறுதெய்வங்கள்
நீ பெருந்தெய்வம்!
*
கண்ணும் கண்ணும்
பேசிக் கொள்வதற்கும்
முத்தம் என்றே பெயர்!
*
புள்ளிகளாய்
நாம்;
அழகிய கோலமாய்
காதல்!
*
மனம்
தோகை விரித்தாடுகிறது;
ம்,
அது நீ
வருவதற்கான அறிகுறி!

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! #6 , #5 , #4 , #3 , # 02 , # 01

Reader Comments

  1. முகில்

    full formல எழுதிருக்கீங்க போல! அருமை

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/