அது , அது மட்டுமே காதல்! #9

உன்னை மையப்புள்ளியாய்
கொண்டே சுற்றுகிறது
என் உலகம்!

*

என் எல்லா
ஜாதகக் கட்டங்களிலும்
உன் பெயர்!

*

பிரிந்திருக்கும் சமயங்களில்
மெளனமாய் அழுதிருக்கும்
இதயங்கள் –
அருகாமையில்
சத்தமாய் பேசத் தொடங்கிவிடுகின்றன
நம்மை கையமர்த்திவிட்டு!

*

தொட்டு பேசியதற்கே
எனை பாவியாக்குகிறது
உன் நாக்கு;
கனவில் புக்கு பார்த்தால்
என்னை
என்ன சொல்லி ஏசும்?!

*

நீ இல்லா நான்
வெற்று காகிதத்திலான
கவிதை புத்தகம்!

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! #8 , #7 , #6 , #5 , #4 , #3 , # 02 , # 01

Reader Comments

  1. anbumani

    //நீ இல்லா நான்
    வெற்று காகிதத்திலான
    கவிதை புத்தகம்!//

    நல்ல சிந்தனை.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/