காதலும் கடவுளும்

காதலை ஒருபக்கம் வைத்து
தன்னை மறுப்பக்கம் வைத்து
யார் வேண்டும் என்றான் கடவுள்!
கடவுளை மறுதலித்து
காதலை எடுத்துக் கொள்ள
ஏமாற்றத்தில் அடிக்க பின்
துரத்துகிறான் கடவுள்!
பத்திரமாய் நான்
கட்டிக்கொண்ட சந்தோசத்தில்
துரத்தும் கடவுளைப் பார்த்து ஒரு
கேலிப் புன்னகை சிந்துகிறது
என் காதல்!

– ப்ரியன்.

Reader Comments

 1. Manmadan

  காதல் ரசம் சொட்டுகிறது. இதுவும் அருமை.

 2. Go.Ganesh

  // காட்டும் சாக்கில் மேல்சாய்ந்து
  கன்னம் உரசி ‘இச்’ வைக்க எத்தனிக்க
  மூக்கு வியர்த்து
  இடையில் வந்தமர்ந்து
  இது எல்லாம் அப்புறம்ம்ம்ம்ம்ம்ம் தான்
  என நீட்டிச் சொல்லி
  எரிச்சலூட்டும் காதல்! //

  சார் அதென்ன சார் காதலித்தாலே “இச்” வைக்கத் தோன்றுகிறது வீட்டில் “இக்” வைக்கப் போவது மட்டும் மறந்து போய்விடுகிறது. முத்தமென்பது காதலின் மொழியா சார்? காமத்தின் மொழியா சார்? ஏன் பெண்கள் மட்டும் ஒரு “இச்” சோ ஒரு “பச்”சோ வைக்க மாட்டேன் என்கிறார்கள். ஆண்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் “வீக்” தானோ

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/