சில காதல் கவிதைகள்- 9

உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!

– ப்ரியன்.

நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!

– ப்ரியன்.

எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!

– ப்ரியன்.

வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!

– ப்ரியன்.

உன் உயிரோடு உயிராகும்
வரம் கூட வேண்டாம்!
உன் உயிருக்கு நிழலாகும்
வாய்ப்பாவது தா!

– ப்ரியன்.

உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!

– ப்ரியன்.

51 thoughts on “சில காதல் கவிதைகள்- 9

 1. It’s simply superb…. Amazing priyan … First time ippo than unga kavithai padichen…. Keep going…?

 2. வானப் போர்வையெங்கும்நட்சத்திர ஓட்டைகள்!உன் கூந்தல் உதிர் கறுநூல்களை தா!தைத்துக் கொள்ளட்டும்இரவு! – romba nala iruku sir indha kavidhai. ipo dha mudhal dhadavaya unga kavidhai padikre ini dhinamum padipen. ponungla pathi dha neraya iruku but oru ponu avan kadhalana epd varnipanu unga kavidha mulama na therinjukanunu nenaikre priyan ….!

 3. வானப் போர்வையெங்கும்நட்சத்திர ஓட்டைகள்!உன் கூந்தல் உதிர் கறுநூல்களை தா!தைத்துக் கொள்ளட்டும்இரவு! – romba nala iruku sir indha kavidhai. ipo dha mudhal dhadavaya unga kavidhai padikre ini dhinamum padipen. ponungla pathi dha neraya iruku but oru ponu avan kadhalana epd varnipanu unga kavidha mulama na therinjukanunu nenaikre priyan ….!

 4. கவிஞனே!
  நீ என்ன வேற்று கிரக வாசியா?
  உன் கவிதையை கேட்டு
  பூமித்தாய் கூட சுழல்வதை நிருத்திக்கொண்ட்டாள்,
  சில நொடிகள்-

  கவிஞனே!
  சிறிது நேரம்
  உன் நீல குருதி சிந்தும்
  வாளை என்னிடம் கொடு
  கல்லறையில் தூங்கி கொண்டிருக்கும்
  மாவீரன் நெப்போலியனை எழுப்பி சொல்கிறேன்.
  வீரா” நீ கண்டிராத ஆயுதம் பார்த்தாயா ” என்று.
  தமிழர் காழி நா.அகில் வேந்தன் தொ.பொறியியல் 9788885931 –

 5. Priyan Ungaluku nan oru kavithai eludhukiran

  Kavithaigalai Rasikka
  vaigum Alaha
  Unnaku theriyamal
  Nee Endru Kavithaiyaka
  Marinai Ennul
  kattaruvi pola bainthodikirai

 6. Ungal kavithai arumai…!!
  Ennai mannithuvidungal!?

  Ungal kavithaikalai en kaathaliyidam en kavidhaikal entru kativiten

 7. கவிதைகளை படைப்பவனை விட, அந்த கவிதைகளை ரசிப்பவன் அதிகம் ஆனந்தபடுகிறான், உதாரணம் நான்…! நன்றி நண்பனே

 8. வானப் போர்வையெங்கும்
  நட்சத்திர ஓட்டைகள்!
  உன் கூந்தல்
  உதிர் கறுநூல்களை தா!
  தைத்துக் கொள்ளட்டும்
  இரவு!

  Really nice………………………
  I sight one long hair girl. When i read this quote she come in mind..

 9. வானப் போர்வையெங்கும்
  நட்சத்திர ஓட்டைகள்!
  உன் கூந்தல்
  உதிர் கறுநூல்களை தா!
  தைத்துக் கொள்ளட்டும்
  இரவு

  nice poem

 10. Vanakkam Nanba…

  Ungalin kavithaigal anaithun ithuvarai matroru nanbarmoolmaaga padithen indruthaan Ungalin pakkathilirunthu padikka vaaippu kidaitthathu ,padithen padithen….ellaavatrayum padithen anaithume miga alagaaga ,arputhamaaga,anubava reethiyaaga ,ullathu Ungalin kavithai payanam thadara enathu MANAMAARNTHA VAAZTTHUKKAL…!!!
  Anbudan
  SK.SELVAA
  MAYAVARAM.

 11. அன்பின் ப்ரியன்

  சும்மா ‘நச்’சுனு இருக்கு

  அன்புடன்
  பரநீதரா

 12. தகவலுக்கு நன்றி விக்னேஷ் (என் இயற்பெயரும் இதுதான்).உன்னை விட அழகானவள் நீ…கவிதை புத்தகமா?நான் படித்ததில்லை/பார்த்ததும் இல்லாஇ.தெரியவில்லை விக்னேஷ்,சிலசமயங்களில் இம்மாதிரி நிகழ்வது உண்டு.புத்தகம் எங்கே கிடக்கும் சென்னை நியூ புக் லேண்ட்சில் கிடக்குமா?

 13. உன்னை விட அழகானவள் நீ… என்பது கண்ணனிக் கவிதை நூலின் பெயர். உங்கள் கவிதையின் ஒருவரி !

  இங்கிருந்து அங்கேயா ? அங்கிருந்ந்து இங்கேயா ?

 14. நன்றி முகில்!ரொம்ப நாள் கழிச்சு வலைப்பூ பக்கம் வந்திருக்கீங்க போல!

 15. saw your profile at orkut…. that is how i came here…. wonderful…. thats all i can say….

 16. ம்ம்…..அருமை! குறிப்பாக கடைசி கவிதை

 17. /*உங்கள் கவிதையை சிறுது மாற்றியதற்கு மன்னிக்கவும் :)*/
  மன்னிப்பா!கிடைக்கவே கிடைக்காது நவீன்!! 🙂

  கவிதையாய் மறுமொழிந்தற்கு நன்றி நவீன்!

  /*நான் காதல் அரசன் இல்லை ப்ரீயன் :))*/

  ஆமாம் ஆமாம் நீங்கள் காதல் கவியரசர் 🙂

 18. காதல் கவிதை என்பதற்கு
  சரியான எடுத்துக்காட்டு
  கேட்டேன் உன்னைக் காட்டியது
  தமிழ்!

  உங்கள் கவிதையை சிறுது மாற்றியதற்கு மன்னிக்கவும் 🙂
  நான் காதல் அரசன் இல்லை ப்ரீயன் :))

 19. மாற்றி விட்டேன் பிரியன்! நன்றி

 20. நன்றி தயா! tya வை தயா என மாற்றலாமே 🙂 என் மனதில் தோன்றியதை சொன்னேன் தோழி

 21. அட காதல் அரசர் “நவீன்” இடமிருந்து பாராட்டா! நன்றி நவீன் 🙂

 22. வானப் போர்வையெங்கும்
  நட்சத்திர ஓட்டைகள்!
  உன் கூந்தல்
  உதிர் கறுநூல்களை தா!
  தைத்துக் கொள்ளட்டும்
  இரவு!

  அருமையான கற்பணை .. மிகவும் ரசித்தேன் ..

 23. வானப் போர்வையெங்கும்
  நட்சத்திர ஓட்டைகள்!
  உன் கூந்தல்
  உதிர் கறுநூல்களை தா!
  தைத்துக் கொள்ளட்டும்
  இரவு!

  அருமையான கற்பணை .. மிகவும் ரசித்தேன் ..

 24. அழகு வரிகள் பாராடுக்கள் பிரியன்

 25. //உறங்கட்டும் விடு!
  உன்னை தேடோ
  தேடோ என்று தேடி
  என்னிடம் கொடுத்த
  களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
  என் கவிதைகள்!//

  மிகவும் ரசித்தேன் 🙂 வாழ்த்துக்கள் ப்ரியன்!!

 26. வாங்க அருட்பெருங்கோ,

  நிச்சயமாக உங்களைப் போன்றோர் ஆதரவுடன் தொடர்கிறேன்…

 27. ப்ரியன்…

  கவிதைகள் அழகு…அருமை…

  இது போல மேலும் பல கவிதைகளை உங்களிடம் எதிர்பார்க்கும்,
  அருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.