உயிரெங்கும் குளிர் ஊசி!

காதலர் தின வாழ்த்துக்கள்!
நினைவுகளை தலையணையாக்கி
உறங்கிய நாளில்
கனவெல்லாம்
உன் வாசம்!
*
இதயத்தின் சுவரெங்கும்
நிறைகிறாய்
பின்னிரவின் மீது
பற்றி படர்ந்து விரியும்
மெல்லிசையென!
*
எதிர் எதிர் வந்தபோது
என் நிழலோடு உரசிக் கொண்டதற்கே
வெட்கத்தில் சிவந்துபோகிறது
உன் நிழல்!
*
உயிரெங்கும்
குளிர் ஊசி –
முத்தம் போர்த்திவிடு வா…
*
உயிர் பட்டத்தின்
கயிறு
உன் கைகளில் –
பத்திரபடுத்துவதும்;
விட்டுவிடுவதும்;
உந்தன் இஷ்டம்!
*
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்,
என்னுள்
காதல் இன்று
செல்லாக் காசாகிவிட்டது…
*

– ப்ரியன்.

* 2 வருசமா Draft ல இருந்தது , இன்னிக்கு பதிக்கிறேன்.

2009 – நீ…நான்…பின்,நமக்கான மழை…

2008 – இசைக்குறிப்புகளாய்!

2007 – விழி படபடக்கும் சப்தம்

Reader Comments

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/