அது , அது மட்டுமே காதல்! #8

உன்னைப் பற்றிய
கனவுகளை தின்று
பெருத்து கிடக்கிறது
என்
படுக்கைத் தலையணை!

*

குளித்து
நீ வருவதற்குள்;
ஒரு சின்ன போரே
நிகழ்ந்துவிடுகிறது
அலமாரி சேலைகளுக்குள்;
உனைக் கட்டிக் கொள்ள!

*

நீ கட்டிக்கொள்ள
சேலைக்கும் பிறக்கிறது
காமம்!

*

நீ –
சுவர்க்கத்திற்கான
திசைக்காட்டி!

*

நட்சத்திரங்களை கூட
ஒளித்து வைத்துவிடுவேன்
உன் நினைவுகளை
எங்கே ஒளிப்பது?

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! #7 , #6 , #5 , #4 , #3 , # 02 , # 01

https://www.theloadguru.com/