அது , அது மட்டுமே காதல்! #10

முத்தம்
நம் ஊடல் முறிவுக்கான
சமாதான ஒப்பந்தம்!

*

உன்னை என்னிடம் புதிதாயும்
என்னை உன்னிடம் புதிதாயும்
தரும் வல்லமை
ஊடலுக்கு பின்னான
அக்கணத்திற்கே வாய்த்திருக்கிறது!

*

ஊடல் முறிவு தருணத்தில்
உன் கண் தங்கும்
ஒற்றை துளி கண்ணீரில்
நதி மூலத்துளியின் தூய்மை!

*

நம் ஊடலுக்கான
சமாதானத்தோடு வருகிறாய்;
மெல்ல விடிய தொடங்குகிறது
என் மேல் கவிந்த இரவு!

*

நீ தந்துபோன
சில முத்தங்களும்
சில புன்னகைகளும்
போதுமாயிருக்கிறது;
ஊடல் முறித்து
திரும்பும் மட்டும்
என்னை உயிரோடு வைத்திருக்க!

– ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! #9 , #8 , #7 , #6 , #5 , #4 , #3 , # 02 , # 01

https://www.theloadguru.com/