ஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 15

பதிலேதும் பேசாமல் போன
நாள் தொடக்கமாய்
நீ செல்லுமிடமெல்லாம்
கரைந்தபடியே
அலைகிறது
என் மனக்காகம்.

– ப்ரியன்.

மனம் உறை பறவை – 01

மழைத்துளி சேகரிக்கும்
மழலையாக நின்
நினைவுகளை கோர்க்கிறேன்

மன இடுக்கில் வழிந்து
நனைக்கின்றன
அதே பழைய பரவசத்தோடு.

– ப்ரியன்.