மிருகம்

காலைச் சுற்றிச் சுற்றிவரும்
பூனைக்குட்டியை
தள்ளிப்போவென எட்டி
அனாதரவாக விட்டுச் செல்லும் தருணங்களில்
கூரிய நகம் முளைக்க
மிருகமாக மாறுகிறேன் நான்

– ப்ரியன்

மனம் உறை பறவை – 04

சண்டையிட்டு சமாதானமின்றி
தூங்கிப்போன நாட்களின்
பின்னிரவு விழிப்புகள்
நிகழ்கின்றன
கட்டியணைத்தப்படி.

– ப்ரியன்